விழுப்புரம் அடுத்த கருங்காலிபட்டு கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று (நவம்பர் 3) காலை 9 மணிக்கு கடம் புறப்பாடானது. தொடர்ந்து, 9.45 மணிக்கு மூலவர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, வெகு விமரிசையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.