இந்த விபத்தில் பஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த, பேபி செல்வி, 19; கிரன்கர்கட்டா, 28; சகாயமினி, 26; சூர்யா, 25; சகாயமேரி, 32; ஜோஸ்பினா, 27; மற்றும் காரில் வந்த சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தமிழழகன் மனைவி ரூபா, 44; ஆகிய 7 பேர் காயமடைந்தனர். உடனே, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய மினி பஸ் சாலையில் கவிழ்ந்ததால், திண்டிவனம் - சென்னை சாலையில் 4:00 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒலக்கூர் போலீசார் விரைந்து வந்து, மினி பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜீப் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு