மரக்காணம் அருகே வள்ளிப்பாளையம் கிராமத்தில், 62 வயது முதியவர் கன்னியப்பன், 11 வயது சிறுமியிடம் வடை வாங்கித் தந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.