திண்டிவனம்: போதை மாத்திரை விற்பனை.. 4 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் டி.எஸ்.பி., யின் தனிப்படை போலீசார் டிசம்பர் 20 அன்று ரோந்து சென்றனர். அப்போது, காவேரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே பாழடைந்த ரைஸ் மில் அருகே நின்றிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். 

அவர்களிடம், 90 போதை மாத்திரைகள் மற்றும் 3 சிரஞ்சிகளை வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த ரொக்கம் ரூ.16,200, மூன்று மொபைல் போன்கள், மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர். 

விசாரணையில், அவர்கள் திண்டிவனம் கிடங்கல் இரண்டு, பெருமாள் கோவில் தெரு மோகன் மகன் வீரா, (29); எம்.ஜி.ஆர். தெரு செல்வம் மகன் ஷியாம், (21); வாணியப்பிள்ளையார் கோவில் தெரு நாகரத்தினம் மகன் விஜய் (29); இறையானூர், மாரியம்மன் கோவில் தெரு குமார் மகன் ஸ்ரீதர், (24); என்பது தெரிய வந்தது. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி