திண்டிவனம்: பரிகாரம் செய்வதாக நகைகளை அபேஸ்.. 3 பேர் கைது

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி, திண்டிவனம் அருகே தாயைப் பார்க்க வந்தபோது, இலவச ஜோதிடம் மற்றும் பரிகாரம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய பெண் உள்பட 3 பேரிடம் தனது 5 1/2 பவுன் தாலிச் சங்கிலியை இழந்தார். வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி, அவரது மனைவி குஷ்பூ மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 1/2 பவுன் நகை மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி