சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. மரக்காணம் போலீசார், பா.ம.க. கடலூர் மாவட்ட முன்னாள் செயலர்கள் கலையரசன், சசிக்குமார், நிர்வாகிகள் உட்பட 20 பேரை கைது செய்தனர். வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால், 20 பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்தார்.
புதுச்சேரியில் தனியாக 2 தொகுதியில் களமிறங்கும் CPM