திண்டிவனம் நகர மன்ற தலைவர் திருமதி நிர்மலா மற்றும் அவரது கணவர் திரு. ரவிச்சந்திரன் மீது மாற்றுத் திறனாளிகளுக்கான நியமனத்தில் 15 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அதிமுக நகர மன்ற உறுப்பினர் ஜனார்த்தனன் இன்று நடைபெற்ற அவசர நகர மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுப்பினார். இந்த குற்றச்சாட்டை ஏற்காத அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.