ஆனால், கடந்த பல ஆண்டுகளாக வாடகை வரியினங்கள் நிலுவை அதிகரித்து வரும் நிலையில், வாடகைப் பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு 'சீல்' வைப்பு, குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புத் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், பேரூராட்சிக்குள்பட்ட 103 கடைகளுக்கு வாடகைப் பாக்கி ரூ. 80 லட்சமாக உள்ள நிலையில், ஏற்கெனவே எச்சரிக்கை அறிவிப்பு வழங்கியும் பாக்கி செலுத்தாத 12 கடைகளுக்கு செயல் அலுவலா் அண்ணாதுரை தலைமையில் பணியாளா்கள் புதன்கிழமை 'சீல்' வைத்தனா்.
அடுத்தகட்டமாக குடிநீா், சொத்து வரி, தொழில் வரி கட்டாதவா்களின் குடிநீா் இணைப்புகள் உள்ளிட்டவை துண்டிக்கப்படும் என்று பேரூராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.