திண்டிவனம்: சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விளங்கம்பாடி கிராமத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோழி தீவனத்திற்காக குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட 1,250 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாதிராப்புலியூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (26) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் 25 மூட்டை ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி