புதுவை: சட்டசபையை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்; வீடியோ

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஆட்டோ ஆன்லைன் செயலியை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும், அரசு அனுமதி பெறாமல் இயங்கும் இரு சக்கர வாகனங்களை வாடகை விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சி. ஐ. டி. யு ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஒரு நாள் ஆட்டோ வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக காமராஜர் சிலை அருகே இருந்து சட்டமன்றம் நோக்கி ஆட்டோ பேரணி தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களுடன் சட்டமன்றத்தை முற்றுகையிட நேரு வீதி, மிஷின் வீதி வழியாக வந்தபோது சட்டப்பேரவை அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசைக் கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி