தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலம் தொகுதியில் வென்ற அதிமுகவின் சி.வி.சண்முகம் ஏற்பாட்டில் ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் விடுதியில் தங்கியுள்ளனர். தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என இபிஎஸ்யிடம் சி.வி.சண்முகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இபிஎஸ் இன்று (மே 7) அவர்களை சந்திக்க புதுச்சேரி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.