விழுப்புரம்: அரசுப் பேருந்து டூ வீலரில் மோதி 3 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே, புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின், கார்த்திக், சிலம்பரசன் ஆகியோர் டூ வீலரில் புதுச்சேரி மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த அரசு சொகுசுப் பேருந்து கார் மீது மோதி, பின்னர் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தின் அடியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கோட்டகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி