மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை: மயிலம் போலீசார் விசாரணை

திண்டிவனம் வட்டம், விளங்கம்பாடி பிரதானச் சாலையைச் சேர்ந்த மு.பாலாஜி (20) என்பவர் நீண்ட நாள் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி