மயிலம் அருகே ஜக்காம்பேட்டை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த லட்சுமிபதி (25) என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.