விழுப்புரம்: மாமியார் வீட்டுக்கு வந்த மருமகனை தாக்கிய கும்பல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே, பூவரசன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பண்ருட்டி அருகே மாமியார் வீட்டிற்கு வந்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் போனதாகக் கூறி, தனசேகர் உள்ளிட்ட 9 பேர் அவரை மின் கம்பத்தில் கட்டி இரும்பு ராடால் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது குழந்தையைத் தள்ளிவிட்டும், மனைவியின் முடியைப் பிடித்து இழுத்தும் துன்புறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பூவரசன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி