அதிமுக தற்போது இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ளது. இதில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் இல்லை என தவெக தரப்பில் உறுதி அளித்ததாக திருமாவளவன் கூறியுள்ளார். விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சி.வி. சண்முகத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.