தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க அதிமுக மூத்த தலைவர் சி.வி.சண்முகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 118-ஐ எட்ட அவர்களுக்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்கிடையே விஜய் பக்கம் செல்ல அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இபிஎஸ்ஸை நிர்பந்தம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.