மயிலம் அருகே டிராக்டர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனத்திலிருந்து விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர், மயிலம் அருகே பாலப்பட்டு கிராமத்தில் பொலிரோ ஜீப் மோதியதில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் விறகுகள் சிதறி போக்குவரத்து தடைபட்டது. மயிலம் போலீசார் ஜே.சி.பி இயந்திரம் மூலம் விறகுகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். காயமடைந்த டிராக்டர் ஓட்டுநர் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி