திருவெண்ணெய்நல்லுார் அருகே 3 கடைகளை உடைத்து பணம் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மடப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அரவிந்த் (33); நகை அடகு கடை வைத்துள்ளார். துலுக்கப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யாசகம் மகன் கிருஷ்ணமூர்த்தி (32); விவசாய பண்ணை சர்வீஸ் கடை வைத்துள்ளார். கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (52); இவர்கள் மூன்று பேரும் மனக்குப்பம் கூட்டரோடு பகுதியில் கடை நடத்தி வருகின்றனர். 

இவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் (ஜனவரி 8) இரவு கடையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின் நேற்று காலை கடையைத் திறப்பதற்காகச் சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த பணம் திருடுபோனது தெரியவந்தது. தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் மூன்று கடைகளிலும் மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி