விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லைலா (58) என்பவர், சாலாமேட்டில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு, கல்லூரி சாலை வழியே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இரு வாலிபர்கள், லைலாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி சங்கிலியை (மதிப்பு சுமார் ரூ. 4 லட்சம்) பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர். இதுகுறித்து லைலா அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.