விழுப்புரம்: வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் நகை, பணம் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அடுக்கம் கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளி சின்னத்தாயின் வீட்டில் மர்ம நபர்கள் 18 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. சின்னத்தாய் தனது நிலத்திற்கு சென்றிருந்தபோது இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. கண்டாச்சிபுரம் போலீசார் தடயங்களை சேகரித்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி