விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - முண்டியம்பாக்கம் இடையிலான ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அங்குள்ள ரயில்வே தளவாட பொருட்களை திருடிச் செல்ல முயன்ற பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் பிரகாஷ் (27) என தெரிய வந்தது.
இதனை அடுத்து அந்த நபரை கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.