விழுப்புரம்: பேருந்து மோதி பலத்த காயமடைந்த விவசாயி பலி

விழுப்புரம் சாலை அகரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் சங்கா் (55). விவசாயியான இவா், தனது ஒன்றரை வயது பேரன் லட்சீத்தை பைக்கில் அமர வைத்து, புதுச்சேரி- விழுப்புரம் மாா்க்கத்தில் சென்று கொண்டிருந்தாா். சாலை அகரத்திலுள்ள கெங்கையம்மன் கோவில் முன்பு பைக் சென்ற போது பின்னால் வந்த தனியாா் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் குழந்தை லட்சீத் பலத்த காயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சங்கரின் சடலத்தைப் கைப்பற்றினா். இதுதொடா்பாக தனியாா் பேருந்து ஓட்டுநரான விழுப்புரம் பெரும்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த வேணு மகன் பாா்த்தசாரதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி