மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழழகன், செயலாளர் குமரகுரு, விழுப்புரம் தொகுதி மாநாட்டு பொறுப்பாளர் ஆறுமுகம் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாமல்லபுரம் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநில மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் செய்வது, ஒன்றிய அளவில் ஆலோசனை கூட்டம் மற்றும் கிராம கிளை ஆலோசனை கூட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு