சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொது மக்கள் தரப்பில் நகராட்சிக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன. நகரமன்ற கூட்டங்களிலும், பன்றியை பிடிக்க வேண்டும் என, கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, சேர்மன், கமிஷனர் ஆகியோர் நகரில் திரியும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, மதுரையைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் பன்றிகளை பிடிக்கும் பணி நேற்று நடந்தது.
அவர்கள் மினி லாரியில் சென்று, விழுப்புரம் GRP தெரு, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகேயும், குழந்தைவேல் நகர் பகுதி காலி மனை, தனலட்சுமி கார்டன், மாம்பழப்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களிலும் 50க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்தனர். அப்போது, பன்றி வளர்ப்போர், பன்றிகளை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி ஊழியர்கள் மற்றும் பன்றி பிடிக்கும் குழுவினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.