திண்டிவனத்தில் பைக் மோதி நகராட்சி பணியாளர் உயிரிழப்பு

திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் அருகே வசிக்கும் ராஜி (55), அரசு கல்லூரியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த 1-ம் தேதி இரவு, சாலை வழியாக நடந்து சென்றபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வியாழன் மாலை உயிரிழந்தார். திண்டிவனம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி