விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை நீடித்த கடும் பனிப்பொழிவால் சாலைகள் இருட்டானது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், அரகண்டநல்லூர் போன்ற பகுதிகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றன. பனிமூட்டம் காரணமாகப் பயணிகளுக்குப் பார்வைத் திறன் குறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.