விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவகுரு (37) நேற்று இரவு கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு காட்டுப்பகுதியில் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த மாசிமக திருவிழா தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை முயற்சி, வெடிகுண்டு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிவகுரு, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.