விழுப்புரம்: இளைஞர் தற்கொலை முயற்சி; மருத்துவமனையில் உயிரிழப்பு

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த துளசிராம் (39) என்பவர், வேலையில்லாததால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் குடும்பப் பிரச்சனை காரணமாக, கடந்த டிசம்பர் 30 அன்று உடலில் பாதரசத்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவி பாண்டியம்மாள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தொடர்புடைய செய்தி