விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிங்கனூர் கிராமத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரீகன் (31) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 போதை மாத்திரைகள், சோடியம் குளோரைடு திரவம், சிரஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றதை ஒப்புக்கொண்ட ரீகனை போலீசார் கைது செய்தனர்.