கோவை விமான நிலையத்தில் தொண்டாமுத்தூர் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், எங்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நானும் சி.வி சண்முகமும் முதலில் இருந்து கூறிவந்தோம். சில கருத்துவேறுபாடு நிலவியது. அது இப்போது சரியாகிவிட்டது. பதவிக்காக வரவில்லை என சிவி சண்முகம் தெளிவாக கூறினார். நாங்களும் சிவி சண்முகமும் அண்ணன் தம்பி போல் ஒற்றுமையாகதான் பழகி வருகிறோம். திமுகவை எதிர்ப்பதால் தான் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தோம் என்று கூறினார்.