மயிலம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வைரம்பேட்டை கிராமத்தில் ரகு என்பவர் தனது வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு வளர்க்கப்பட்ட 3 கஞ்சா செடிகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ரகுவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி