விழுப்புரம், வண்டிமேடு விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்தவர் சிலம்பரசன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதகுமாரி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சிலம்பரசன், தினமும் மது அருந்தி விட்டு, அமுதகுமாரியை அடித்து தாக்குவது வழக்கம். கடந்த 24ம் தேதி மது போதையில் தாக்கினார். இதுகுறித்து அமுதகுமாரி அளித்த புகாரின் பேரில், சிலம்பரசன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.