விழுப்புரம்: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை போலீசார் சோதனை

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி அழகேசன் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர். சோதனையின் போது, கணக்கில் வராத 2 லட்சத்து 330 ரூபாய் கைப்பற்றப்பட்டது. துணை சார்பதிவாளர் நதியாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி