திண்டிவனம் அடுத்த பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியும், பத்திர ஆவண எழுத்தருமான பிரகாஷ் (48) என்பவர், காரில் திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கேணிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மயிலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.