விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த தடுப்பூசி பணி நடக்கவுள்ளது. கால்நடை வளர்க்கும் விவசாயிகள், பொதுமக்கள் மத்திய அரசு நிதியுதவியோடு செயல்படுத்தும் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, தங்களின் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியை சினையுள்ள கால்நடைகள், பால் கறக்கும் பசு மற்றும் எருமை இனங்களில் போட்டுக்கொள்வது அவசியம்.
இதனால் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது. நூறு சதவீதம் இலக்கு அடைய விவசாயிகள் கால்நடைகளை அதிகளவு ஆர்வத்தோடு முகாம்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டு, பொருளாதார இழப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.