திண்டிவனம்: நண்பரின் தலையில் கல்லை போட்டு கொலை.. 3 பேர் கைது

திண்டிவனம் அருகே, காதலி விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நண்பனை தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஜனவரி 30-ஆம் தேதி முதல் காணாமல் போன ஆட்டோ ஓட்டுநர் சசிகுமாரின் உடல், வடசிறுவலூர் பாறை இடுக்குகளில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து சடலமாக மீட்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஜெகதீஷை கைது செய்த போலீசார், அவனது நண்பர்களான ஜெகன் குமார், ஏழுமலை மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி