விழுப்புரம்: சிறப்பு அதிகாரிகள் என பணம் பறித்த 2 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் BMW காரில் லாரிகளை மறித்து, சிறப்பு அதிகாரிகள் என கூறி பணம் வசூல் செய்ததாக ராஜா (54) மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த ராஜா (நகராட்சி ஓட்டுநர்) மற்றும் சித்தோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (கன்ஸ்டிரக்ஷன் பணி) என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி