விக்கிரவாண்டி: கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையார்பட்டு புதுகாலனியைச் சேர்ந்த 19 வயது மாணவர் சீவிதன், தந்தையின் குடிப்பழக்கத்தைக் கண்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தையை சீவிதன் கண்டித்ததால் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் மனமுடைந்த சீவிதன், வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி