மேல்மருவத்தூர் அருகே மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சபீதா (30) என்பவர் திண்டிவனம் பாரதிதாசன் நகரில் வசித்து வந்தார். கடந்த நான்கு நாட்களாக கணவருடன் குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சபீதா நேற்று தற்கொலை செய்துகொண்டார். 2022 செப்டம்பரில் திருமணம் ஆன இவர் கர்ப்பிணியாக இருந்தார். இது குறித்து சபீதாவின் தாயார் அளித்த புகாரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான நான்கு ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.