இந்த மாணவிக்கு நேற்று (டிசம்பர் 21) செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி சைக்கிள், கைக்கடிகாரம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை வழங்கினார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள், வட்டார கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர். கிராமப் பொதுமக்கள் சார்பில் பாராட்டுப் பத்திரம் வழங்கினார். ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.
இந்நிகழ்ச்சிகளில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும், கிராமப் பொதுமக்களும் மாணவியை நேரிலும், வாட்சாப்பிலும் பாராட்டி வருகின்றனர்.