மேல்மலையனூர் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

மேல்மலையனூர் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் மாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் மயானக்கொள்ளை மற்றும் தீமிதி திருவிழாக்களுக்குப் பிறகு, 7-ஆம் நாள் நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவ அம்மன், மகா தீபாராதனையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

தொடர்புடைய செய்தி