செஞ்சி: பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

செஞ்சி அடுத்த செவலபுரை கிராமத்தை சேர்ந்தவர் பாலு மகன் விஜய் (24); இவர் நேற்று முன்தினம் (அக்.,6) மாலை செஞ்சியில் இருந்து விழுப்புரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். தென்புதுப்பட்டு கூட்ரோடு அருகே சென்ற போது பின்னால் வந்த டாடா இண்டிகா கார், பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜய் அதே இடத்தில் இறந்தார். இந்த விபத்து குறித்து நேற்று (அக்.,7) அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி