லாரியை சங்ககிரியைச் சேர்ந்த மனோகரன்(45) ஓட்டி வந்தார். 4. 10 மணியளவில், நீதிபதிகள் குடியிருப்பு எதிரே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் இருந்த கடைகளுக்குள் லாரி புகுந்தது. கடைக்கு வெளியே நிறுத்தி இருந்த பாரூக் என்பவருக்கு சொந்தமான இட்டியாஸ் வாடகை கார் சேதமானது.
மேலும் மெக்கானிக் கடை, மூங்கில் கழி விற்பனை செய்யும் கடை, பஞ்சர் கடை ஆகிய கடைகளும் சேதமானது. இந்த விபத்தில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் ஜே. சி. பி. , மற்றும் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.