செஞ்சி திண்டிவனம் சாலையில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் (57) ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்றபோது, பின்னாலிருந்து வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் செல்லப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.