ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த செஞ்சி ஏழுமலை

விழுப்புரம் மாவட்ட ஓ.பி.எஸ். அணி செயலாளராக இருந்த முன்னாள் எம்.பி. செஞ்சி ஏழுமலை, தனது அணியிலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்ததால், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பழனிசாமியைச் சந்தித்து இணைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தவறை உணர்ந்து தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளதாகவும், வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடப் போவதாகவும் ஏழுமலை கூறியுள்ளார். மாவட்டச் செயலாளர் சண்முகத்தின் ஒப்புதலுடன் மீதமுள்ள நிர்வாகிகளும் விரைவில் கட்சியில் இணைய உள்ளனர்.

தொடர்புடைய செய்தி