செஞ்சி அருகே கிணற்றில் கார் விழுந்து நால்வர் பலி

சென்னையைச் சேர்ந்த வினோத், சேகர், ராஜா, ஜெயமுருகன் ஆகியோர் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றுவிட்டு, நேற்று (மார்ச் 3) காலை சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். செஞ்சி அருகே, ஓட்டுநர் ராஜாவுக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தால் கார் கட்டுப்பாட்டை இழந்து விவசாய கிணற்றில் பாய்ந்தது. இதில் காருக்குள் இருந்து வினோத், சேகர், ராஜா ஆகியோரின் உடல்களும், ஜெயமுருகன் உடல் கிணற்றுக்குள் இருந்தும் மீட்கப்பட்டன. சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி