விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலராக ருசேந்திரகுமாரை அறிவித்த கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கிராமங்கள் தோறும் உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர்கள் தேர்வு, கிளைகளில் கல்வெட்டு, பதாகைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ருசேந்திரகுமார் ஏற்புரையாற்றினார்.