செஞ்சி - திண்டிவனம் சாலையில் ராஜாம்புலியூர் ஊராட்சி காந்தி நகர் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. செஞ்சி போலீஸார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.