விக்கிரவாண்டி: அதிமுக - தவெக பிரமுகர்கள் மோதல்; இருவரும் காயம்

விக்கிரவாண்டி அடுத்த வெள்ளரிபட்டு கிராமத்தில், அதிமுக பிரமுகர் துரைக்கண்ணு (46) மற்றும் தவெக பிரமுகர் கவியரசு (30) ஆகியோருக்கு இடையே அரசியல் ரீதியான விமர்சனத்தால் ஏற்பட்ட மோதலில், கவியரசு கத்தியாலும், துரைக்கண்ணு பீர் பாட்டிலாலும் தாக்கி கொண்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்து சென்னை ஸ்டான்லி மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கஞ்சனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி